EnTamil.News
F Y T

மனைவியின் காதை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற கணவன்- யாழில் சம்பவம்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2025-01-11)
மனைவியின் காதை வெட்டிவிட்டு  தப்பிச் சென்ற கணவன்- யாழில் சம்பவம்

மேலும் குறித்த நபர் தனது மனைவியின் தலை மற்றும் காலை உடைத்து பல்வேறு சித்திரவதைகளை புரிந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் நெடு நாட்களாக மனைவியுடன் முரண்பாட்டில் இருந்த கணவன் மனைவியின் காதை வட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது


இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்


வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனுடைய சித்திரவதையை தாங்க முடியாது அவருடைய உறவினர் வீட்டில் வாசித்து வந்திருக்கிறார்


இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற கணவன் மனைவியுடன் முரண்பட்டு மனைவியின் காதை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின் மானிப்பாய் போலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது


குறித்த பெண்ணின் கணவர் மீது ஏற்கனவே வேறு சில முறைப்பாடுகள் வட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருப்பது தெரியவந்துள்ளது இந்த நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை போலீசாரினால் கைது செய்யப்பட்டார்


மேலும் குறித்த நபர் தனது மனைவியின் தலை மற்றும் காலை உடைத்து பல்வேறு சித்திரவதைகளை புரிந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது


கைது செய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறுகளில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதவான் உத்தரவுட்டுள்ளார்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.