EnTamil.News
F Y T

மு. க ஸ்டாலின் உடன் செல்பி எடுத்துக் கொண்ட சாணக்கியன்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2025-01-13)
மு. க ஸ்டாலின் உடன் செல்பி எடுத்துக் கொண்ட சாணக்கியன்

இந்தியாவில் நெடுங்காலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் சாணக்கியன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

2025உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் உள்ளிட்டவர்கள் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது


சென்னையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகள் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறித்த வர்த்தகம் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது


புலம்பெயர் தமிழர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் மனமகிழ்வை உண்டாக்குவதன் நோக்கமாகவும் கொண்டு இந்தக் கண்காட்சியும் வர்த்தகமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்தியாவில் நெடுங்காலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் சாணக்கியன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


இதன் இடையே தமிழக முதலமைச்சர் ஸ்டாலினையும் சந்தித்ததாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்


இந்த நிகழ்விலே பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன் செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.